திருவாரூர்: கடந்த வாரம் களப்பால் காவல் சரகத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மனோஜ் (எ) மனோ நிர்மல்ராஜ் 25/24, த/பெ. ஜேசுதாஸ், அக்ரஹாரத்தெரு, பூவனூர் என்ற வரலாற்று பதிவேட்டு குற்றவாளி இறந்த பூவனூர் ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியாவார். நீடாமங்கலம் முன்னால் CPI ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக பூவனூர் ராஜ்குமார் கடந்த 2023-ம் ஆண்டு நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி மற்றும் அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பூவனூர் ராஜ்குமார் கொலைக்கு பழி தீர்க்க அவரது மனைவி ராஜகுமாரியின் தூண்டுதலின் பேரில் பூவனூர் பாமனி ஆறு மேற்கு கரையில் உள்ள பூவனூர் ராஜ்குமார் சமாதி அருகே மனோஜ் (எ) மனோ நிர்மல்ராஜ் மற்றும் குற்றவாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.
இத்தகவலறிந்து நீடாமங்கலம் காவல் உதவி அய்வாளர் திரு.சந்தோஷ்குமார் மற்றும் காவலர்கள் சம்பவயிடம் சென்று பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடியிருந்த 1) தென்னரசு (எ) தனுஷ்கர் (21/24. த/பெ. முருகவேல், தெற்கு தெரு, வெண்ணவாசல், கொரடாச்சேரி. 2) தயா (எ) தயாநிதிமாறன், (19/24). த/பெ கருணாநிதி, அக்ரஹாரம், பூவனூர். 3) ஷியாம் (19/24). த/பெ. கார்த்திக் அந்தோனி, பண்டாரவோடை, பூவனூர். 4) ஆகாஷ் (எ) பிரேம்குமார் (24/24) த/பெ. முருகமணி, தெற்கு தெரு, ஓடதுரை, ஒளிமதி. 5) மாணிக்கம் (29/24). த/பெ. மூர்த்தி, தெற்கு தெரு, ஓடதுறை, ஒளிமதி ஆகியோரை கைது செய்தனர். அதில் மனோஜ் (எ) மனோ நிர்மல்ராஜ் என்பவர் மட்டும் தப்பி சென்றுவிட்டார். மேற்கண்ட குற்றவாளிகள் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளி மனோஜ் (எ) மனோ நிர்மல்ராஜ், நகர் தெருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பிடிக்க சென்றபோது காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முற்பட்டபோது கைத்துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு தற்போது திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார். மேலும், அசாதாரண சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு கொலை வழக்கின் குற்றவாளியை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.சந்தோஷ்குமார் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடித்தடி, பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.