கோவை : கோவை மாநகரம் கோவைப்புதூர், அறிவொளி நகர் ஹவுசிங் யூனிட் 15வது பிளாக்கை சேர்ந்த ஜேசுராஜ் (34), என்பவர் கடந்த (23/9/2022),-ம் தேதி அன்று குடியமுத்தூர் முத்துசாமி சேர்வை வீதியில், வசிக்கும் இந்து முன்னணி சேர்ந்த திரு.தியாகு, என்பவரது காரின் மீதும் மற்றும் குனியமுத்தூர் சுப்புலட்சுமி நகர் ஆறாவது வீதியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த திர. கமலக்கண்ணன், (40), என்பவரது காரின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த (27/09/2022),-ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு குற்றவாளி ஜேசுராஜ், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
b3 வெரைட்டி ஹால் ரோடு, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையர் வீதியில் வசிக்கும் திரு தினேஷ் குமார் (24), என்பவருக்கு சொந்தமான மாருதி கலெக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒப்பணக்கார வீதியில், இயங்கி வந்த ஜவுளி கடையின் மீது கடந்த (22/9/2022), தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பி3 வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு இவ்வழக்கில் உக்கடம் சிட்டி பார்க் ரெண்டாவது வீதியை சேர்ந்த குற்றவாளி பாஷா (36), என்பவர் கடந்த (3/10/2022), ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்படி குற்றவாளிகள் ஜேசுராஜ் பாஷா ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நகல்கள் இன்று (14/10/2022),-ம் தேதி கோவை மத்திய சிறையில் மேற்படி இருவருக்கும் வழங்கப்பட்டது ஏற்கனவே 13 10 2022-ம் தேதி கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன் (32), மற்றும் துடியலூர் ஆர் எஸ் தோட்டம் நேரு வீதியை சேர்ந்த அகமது சகாபுதீன் 24 ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அடுத்து இதுவரையில் மொத்தம் நான்கு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.