ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரௌடிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கும், கொடுங்குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக ரோந்து காவலர்கள் பணியில் ஈடுபட்ட உள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி, சம்மந்தப்பட்ட இடங்களுக்கு உடனே சென்று அவர்களை உடனடியாக பிடிப்பதற்காகவும், அவர்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான முறையில் ஆயுத பயன்படுத்த காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரோந்து வாகனங்கள் மதுரை மாநகரில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கும் மற்றும் குறிப்பாக பொதுமக்களை பாதுகாத்திடவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரவிற்கும் நாட்களில், மதுரை மாநகர் குற்றம் இல்லா மாநகரமாக ஒளிர இருக்கின்றது. காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்கு மதுரை மக்களிடையே நல்ல வரவேற்ப்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக மதுரையிலிருந்து
திரு. ஜஸ்டின் சரணனன்.