கோவை : கோவை மாநகரில் காவல்துறைக்கும், பொது மக்களுக்கும், இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலும் இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலும் குற்றச்செயல்களில், ஈடுபடாமல் தடுத்து அவர்களை தங்களுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி குற்றமில்லா தலைமுறையை உருவாக்க வேண்டி கோவை மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் நெருக்கமான குடியிருப்பு பகுதி, மற்றும் குடிசை பகுதிகளில் உள்ள குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் வாசிக்க ஏதுவாக ”வீதி தோறும் நூலகம்” என்ற திட்டம் (12/08/2022), -ம் தேதி அன்று துவங்கப்பட்டது.
முன்னோட்டமாக புலியகுளம் ஏரிமேடு பகுதியில் வீதிதோறும் நூலகம் என்று அமைக்கப்பட்டது, மேற்படி முன்னோட்ட நூலகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து அதில் உள்ள ஒரு சில நடைமுறை வேறுபாடுகளை கலந்து தற்போது திட்டத்தின் முதற்கட்டமாக இன்று (13/10/2022),-ம் தேதி பீளமேடு ஜி.ஆர்.ஜி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 30 வீதிதோறும் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது. கோவை மாநகரில் குனியமுத்தூர், ஆசாத் நகர், கரும்புக்கடை, கண்ணப்ப நகர், கணபதி மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளது, மேற்படி நூலகங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட கதை அறிவியல், பொழுதுபோக்கு சார்ந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூலகத்தை சம்பந்தப்பட்ட பகுதியை சார்ந்த காவல் ஆய்வாளர், அவர்களின் மேற்பார்வையில் அப்பகுதியை சார்ந்த ஒரு தன்னார்வலர 200க்கும் மேற்பட்ட கதை அறிவியல் பொழுதுபோக்கு சார்ந்த நூல்கள் இடம் பெற்றுள்ளன.
மேற்படி நூலகத்தை சம்பந்தப்பட்ட பகுதியை சார்ந்த காவல் ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில் அப்பகுதியை சார்ந்த ஒரு தன்னார்வலர் நிர்வகிப்பார் இந்நூலகத்தில் சம்பந்தப்பட்ட பகுதியை சார்ந்த குழந்தைகள் (06 முதல் 18) வயது உறுப்பினர் ஆவதற்கு உறுப்பினர் அடையாள அட்டை அந்தந்த நூலகத்தில், வழங்கப்படும் வீதி தோறும் நூலகத்தில் உறுப்பினரான குழந்தைகள் தினந்தோறும் நூலக நேரமான மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை மேற்படி நூலகங்களுக்கு சென்று தல ஒரு புத்தகம் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து திரும்ப ஒப்படைத்து மீண்டும் அடுத்த புத்தகத்தை எடுத்துச் செல்ல ஏதுவாக வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன மேற்படி நூலகத்தை குழந்தைகள் இளம் வயதினர் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சரியான முறையில் பயன்படுத்தி குற்றமில்லாத தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம்.