இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பேருந்து, ஆட்டோ மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாகன ஓட்டுநர்களிடம், ரவுடிகள் நடமாட்டம் மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்:04567-230759 / 04567-232111, ஹலோ போலீஸ் 83000-31100 ஆகிய எண்களுக்கோ, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கோ உடனே தகவல் தருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது