மதுரை : (15.04.2023) மாலை 6 மணியளவில் மதுரை மாநகர் E1 புதூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 64 கேமிராக்களின் பதிவுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. நரேந்திரன் நாயர் IPS., அவர்கள் திறந்து வைத்து புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்காகவும் கண்காணிப்பு கேமிராக்கள் 64 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பும் மற்றும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் தருவதாகவும் தொடர்ந்து காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி குற்றமில்லா மாநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு திரு.அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல் உதவி ஆணையர் திரு.சூரகுமாரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
திரு.விஜயராஜ்