பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. G.கார்த்திகேயன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணா சுந்தர் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறா வகையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். (20.03.2023)-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் இந்த சிறப்பு ரோந்து காவல் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிறப்பு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையிலுள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், நகரில் பூட்டியுள்ள வீடுகள் மற்றும் அதில் வசித்து வருபவர்களின் தகவல்களை சேகரித்தும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள். எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் காவல்துறையினரின் தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உங்கள் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள் என்றும் மேலும் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.