திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் பல முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர் நடவடிக்கையாக இன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் , உடனுக்குடன் குற்ற சம்பவ இடங்களை சென்று விசாரணை செய்யவும் அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் அறிவுரையின்படி செல்லாயி அம்மன் கோவில் 3 கேமராக்களும், தெப்பக்குளம் முதல் தெருவில் 2, தெப்பக்குளம் இரண்டாம் தெருவில் 2, சிவன் கோவில் தெரு 2, கருங்குளம் விலக்கில் 2, பிள்ளையார் கோவில் 3,
மேலத்தெரு அளவு சமன் தெருவில் 2, பலவேச அம்மன் கோவில் தெருவில் 2, வெற்றி விநாயகர் கோவில் 1 , ஆகிய 9 இடங்களில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி, சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.