காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் சுமார் 650 குடும்பங்களில் 2000 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இந்நகரில் வசிப்போர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் அறிவுரைகளையேற்று தங்களது பகுதிகளில் சுமார் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் 36 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் இன்று ( 26.08.2021 ) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குற்றங்களை வெகுவாக தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதற்கும் “மூன்றாவது கண் “ என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன.
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட எவரும் துணியமாட்டார்கள், எனவே, இதுபோல மற்ற குடியிருப்பு பகுதிகளிலும் பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்