ஈரோடு : ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புதுப்பாளையம் ஐய்யம் பாளையம் பிரிவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், போலீஸ் நியூஸ் ப்ளஸ் மீடியா ஆகியோரின் சீர்மிகு முயற்சியில் ஐய்யம்பாளையம் ஆவீன் சொசைட்டி, அங்காளம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேமரா பொருத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள், தலைமை காவலர் திரு.சுரேஷ்குமார், ஆவீன் செகரட்டிரி திரு.வெங்கட்(எ) வெங்கடாசலம், முன்னாள் புதுப்பாளையம் ஊராட்சி துணை தலைவர் திரு.பொன்னுசாமி, போலீஸ் நியூஸ் ப்ளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.செந்தில் குமார், குடியுரிமை நிருபர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதை செயல்படுத்தி கொடுத்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் சிறப்பாக பணியாற்றி, அப்பகுதி மக்களை நோயிலிருந்து பாதுகாக்க, தீவிர ரோந்து பணி, வாகன சோதனை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக சீரிய முறையில் பணியாற்றி வருகின்றார்.