கோவை : கோவையில் முதல்முறையாக ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கவும், குற்றங்களை குறைக்கவும் “லைப்ரரி ஆன் வீல்ஸ் ” என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார். செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும், காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை துவக்கி வைத்தார்.