பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்தினார்கள்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் இன்று 28.02.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில் மது சம்மந்தமான குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
இந்த சிறப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் நடைப்பெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு முகாமில் பேசுகையில் தவறு செய்வது மனித இயல்பு. அதனை வாய்ப்பு கிடைக்கும்போது திருத்திக் கொள்ள வேண்டும். மேலும் உங்களது வாழ்க்கையினை உயர்த்த தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இங்கு வந்துள்ள உங்கள் மறுவாழ்வுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு சுப்ரீம் லயன்ஸ் சங்கம் உதவியாக இருக்கும் அதன் பொறுப்பாளர்கள் இங்கு கூறியுள்ளார்கள்.
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் உங்களது மறுவாழ்வுக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத் தர தயாராக உள்ளார். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் கௌரவமாகவும், மதிப்புடனும் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து உங்களை நல்வாழ்வு நிலை மேம்படும் வரை உதவியாக கண்காணிக்கும் என்று பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் திரு.செந்தில்குமார், GM, மாவட்ட தொழில் மையம், திரு.பரத்குமார், Lead District Manager (LDM) பெரம்பலூர், திருமதி பிரேமா, முதல் நிலை ஆலோசகர், சமூக நலத்துறை, பெரம்பலூர், திரு.ராஜாராம், தலைவர், சுப்ரீம் லயன்ஸ் கிளப் மற்றும் லயன்ஸ் சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனம் திருந்திய மது குற்றவாளிகள் 45 பேர் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.