மதுரை: மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திரு.ஷேக்மீரான் என்பவரது ஆட்டோவில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கைப்பையினை தவறவிட்டு இறங்கி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் கைப்பையை பார்த்த திரு.ஷேக்மீரான் அதனுள் 4 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.23,500/- பணமும் இருந்ததை கண்டு லட்சாதிபதியாவதை விட லட்சியவாதியாக இருப்பதே சிறந்தது எனக்கருதி கரிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சங்கர்கண்ணன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
அதனையடுத்து கைப்பையை தவறவிட்ட பெண்மணியை கண்டறிந்து ஆட்டோ ஓட்டுநர் மூலமாகவே உரிய அப்பெண்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரின் இந்நேர்மையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி அளித்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்