திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காவல் துறையினர் பொங்கலிட்டு கொண்டாடினர்.
நிகழ்வில் இந்து கிருஸ்தவ முஸ்லீம் மத பெரியோர்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பாரம்பரியத்தின் உன்னதத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் சமத்துவ பொங்கலில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். காவல் ஆய்வாளர் திரு.சக்திவேல், காவல் துணை ஆய்வாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு. இளங்கோ சந்திரசேகர், திரு.சிவராஜ் வெங்கடேசன், காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்