தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை காவல் நிலைய சரகம் திருவலஞ்சுழி அருகே கடந்த (05.04.23), அன்று பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்னும் முத்திரைத்தாள் முகவரிடம் ரூபாய் 60 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் மேற்பார்வையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவ செந்தில்குமார், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் தலைமையில்
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார் தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இக்கொள்ளைச் சம்பவத்தை பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் , மேற்படி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கபிஸ்தலம் உமையாள்புரத்தை சேர்ந்த செந்தில் ராம்குமார், வலங்கைமான் கோவிந்தகுடியை சேர்ந்த குழந்தைவேலு, பட்டீஸ்வரத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் ஆகியோர் என தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவர்களை நேற்று (17-4 -2023) கைது செய்து மேற்படி நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணம், அதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்படி மூன்று நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்