தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான திருவள்ளுவர் நகர் அருகே கடந்த (26.05.23),- ஆம் தேதி காலை சுமார் 6:00 மணி அளவில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் இவ்வழிபறியில் சம்பந்தப்பட்ட கொள்ளையனை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஆசிஷ் ராவத் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் டிபிஎஸ் , கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார் தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொடர்ந்து ஐந்து நாட்களாக CCTV கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் , மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம் , பண்ருட்டி, மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் வயது 38 என்பதும் தற்போது இந்நபர் கும்பகோணம் பெருமாண்டிப் பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து இன்று (31-5-2023) கும்பகோணம் தனிப்படை போலீசார் இந்நபரை கைது செய்தார்கள், மேற்படி நபரிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட 7 சவரன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி நபரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்