தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீராசாமி 74. என்பவருக்கு கடந்த 30.10.2021 ம் தேதி நண்பகல் 1 மணி அளவில் உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்று விட்டு உடல் நலம் பெற்று மீண்டும் வீட்டிற்கு வந்து 04.11.21 அன்று தீபாவளி முடித்து நேற்று 06.11.21ம் தேதி தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்ற போது பீரோவில் இருந்த சுமார் 36 பவுன் நகைகள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மேற்படி வீராசாமி என்பவர் உடனடியாக கும்பகோணம் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா காந்த புனேனி IPS அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
திரு.அசோகன் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன்
ssi ராஜா, ssi செல்வகுமார் Hc பாலு HC சுரேஷ் HC நாடிமுத்து
Gr I ஜனார்த்தனன் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்
அடங்கிய தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு விசாரணை மேற் கொண்டதில் வீராசாமி வீட்டில் மூன்று வருடங்களுக்கு முன்பு குடியிருந்து வந்து தற்போது கும்பகோணம் கோகுலம் நகரில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி தாமரைச்செல்வி 40.மற்றும் அவரது உறவினர் பாபநாசம் தாலுகா இலங்கார்குடி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் மகாதேவன் மகன் பாலாஜி 19. ஆகியோர் மீது சந்தேகம் வந்தது அதனை தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரணை செய்த போது .
அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள் மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 36 1/2 பவுன் 292 கிராம் பல லட்சம் மதிப்புடைய) நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
அதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புகார் தந்த ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட கும்பகோணம் தனிப்படை போலீசாரை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.