தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி , கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
திரு கீர்த்திவாசன் டிபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர் பாலசுப்ரமணியம் மற்றும் காவலர்கள் நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் மேற்படி வாகன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் கொல்லன் திடல் பகுதியில் வசித்து வரும் அன்பழகன் மகன் பாலகுரு (26) என்பது தெரிய வந்ததை தொடர்ந்து அந்நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பாலகுருவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள் அதனை தொடர்ந்து இன்று ( 6-8-2023) குற்றவாளியை கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்