தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞரை சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் பிடிக்க வேண்டி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா காந்த புனேனி IPS, அவர்களின் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.அழகேசன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. கீர்த்திவாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜா , செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியம், பார்த்திபன், திரு.நாடிமுத்து, திரு.ஜனார்த்தனன், திரு.செந்தில் ஆகியோர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் (8-10-2022) புறவழிச் சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுருந்த போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த முடிந்தால் போலீஸ் எங்களை பிடிக்கட்டும் என்று சவால் விட்டு சுற்றி திரிந்த ரவுடிகளான கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் செட்டி மண்டபத்தைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரும் தனிப்படை போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்த போது விபத்து ஏற்பட்டது.
அதில் கீழே விழுந்ததில் இருவரின் கால்கள் உடைந்தது, அதனை தொடர்ந்து அவர்களை போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மாவுகட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரு ரவுடிகளும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கும்பகோணம் பகுதியில் நடந்த இரண்டு கொலை முயற்சி வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு பலவித இன்னல்களையும் தாண்டி இக்குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்களை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்