தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்சேகர் சஞ்சய் IPS அவர்கள் உத்தரவின்படி இன்று காலை (19 -5-2021) கும்பகோணம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை போலீசார் கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் கூட்டுறவு நகர் பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த இனோவா காரை அதிரடியாக நிறுத்தி அதனை சோதனை செய்த போது அதில் 2700 லிட்டர் எரிசாராயம் மற்றும் ரூபாய் 10 லட்சம் பணமும் இருந்தது தெரியவந்தது அதனை கண்ட தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் அந்தக் காரை பறிமுதல் செய்து. காரை ஓட்டி வந்த மயிலாடுதுறை நீடுர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் கைது செய்தார்கள் இவருடன் வந்த மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாபு என்பவன் தப்பி ஓடிவிட்டான் அவனை போலீசார் தேடி வருகின்றார்கள் .
இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சல்லடை போட்டு போலீசார் சோதனை செய்து வரும் நிலையில், கள்ளச் சாராயம் கும்பகோணம் வரை இனோவா காரில் கடத்தி வரப்பட்டது போலீசார் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து
இந்த எரிச்சாராயம் யாருக்காக , எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. என தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்