தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் ,கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க வேண்டி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி IPS அவர்களின் உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)
திரு. ராஜ்குமார் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர்
திரு .அழகேசன், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன், ஆகியோர் அடங்கிய தேடி வந்த நிலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்தான் குற்றவாளி என தெரிய வந்ததை தொடர்ந்து மேற்படி நபரிடமிருந்து 17 சவரன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்