தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உரிமம் பெற்று பார் நடத்தி வருபவர் அறிவரசு. நேற்று 21.04.21ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் இவர் பாரில் இருந்த போது, கும்பகோணத்தை சேர்ந்த சேட்டு (எ) கமால் பாட்சா மற்றும் மகேந்திரன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக பாரில் நுழைந்து வேலையாட்களை மிரட்டி கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பாரில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர். பெட்ரோல் குண்டு வெடித்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மாரிமுத்து என்பவருக்கு முதுகு பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தஞ்சை மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குநர் Tr. ராமச்சந்திரன் தலைமையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Tr.தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவுபடி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில், தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் SSI ராஜா, செல்வகுமார், HC ஜம்புலிங்கம், சண்முகசுந்தரம், கதீஷ், ரமேஷ், சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விரைவாக செயல்பட்டு தப்பியோடிய இரு எதிரிகளையும் பிடித்தனர். சம்பவத்தில் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர். சம்பவம் நடந்து 4 மணி நேரத்துக்குள் எதிரிகளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்