தஞ்சாவூர்: கும்பகோணம் புறப்பகுதியான மேலக் கொட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று 6-12-2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் (பைல்களை) தீயில் எரிந்து நாசம் .
மேலக் கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலராக அசாருதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள நாகக்குடி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் மோசமாக உள்ளதால் அந்த அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வரும் நாகக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி என்பவர் அங்கு இருந்த அனைத்து பைல்களையும் சில தினங்களுக்கு முன் எடுத்து வந்து கொட்டையூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்துள்ளர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடன் கிராம நிர்வாக அலுவலர் அசாருதீனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் நாகக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியும்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலுவலகத்தை திறந்து அங்கு ஏற்பட்டிருந்த தீ மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இத்தகவலறிந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு அதன் பின்னர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ,கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தை பார்வை இட்டனர். அதன் பின் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு யாராவது தீ வைத்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணையை செய்து வருகிறார்கள். கிராமநிர்வாக தீ விபத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்