தஞ்சை; கும்பகோணம் அருகிலுள்ள கீழக் கொட்டையூர் மெயின் ரோட்டில் விமல் என்பவர் அலமேலு ஆயில் மில்ஸ் என்ற பெயரில் சமையல் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று (18-3-2020) இரவு எப்போதும் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு (19-3-2020)காலையில் கடை திறக்க வரும் போது கடை பூட்டு உடைக்கப்பட்டு தன் இரவில் கடையில் வைத்து சென்ற 25 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதை கண்டு திடுக்கிட்டார் அதன் பின் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிழக்கு காவல்துறை போலீஸார் விரைந்து வந்து பார்வை இட்டார்கள் அதன் பின் எண்ணைக் கடை வியாபாரி விமல் தந்த புகாரின் போரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு இக்கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .
மேலும் கடந்த சில தினங்களாக கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுத்து அடுத்து உள்ள கும்பகோணம் ,மேலக்காவிரி ,கீழக் கொட்டையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணம், நகைகளுக்காககொலை,வழிபறி ,கடை உடைத்து பணம் கொள்ளை என நடக்கும் குற்றச் செயல்களை கண்டு இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த பீதியுடன் இருக்கிறார்கள் .
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்