தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் கோயில்களில் சாமி கும்பிடுவது போல் நுழைந்து சாமி கழுத்தில் இருக்கும் நகைகளை திருடி செல்லும் இரண்டு நபர்களை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆசிஸ்ராவத் IPS அவர்களின் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்
திரு.கீர்த்திவாசன் TPS அவர்கள் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்
திரு.சிவசெந்தில்குமார் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன்
ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வகுமார், கதீஸ் தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன்,AR PC அன்புராஜ் ஆகியோர் பல இடங்களில் விசாரணை செய்து தகவல் பெறப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீது வயது (36).S/o. ஜான் பாட்சா, அவுலியா நகர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ராஜ்குமார் வயது (35). S/o. அழகர்சாமி அவுலியா நகர், அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து
22 கிராம் தங்க நகைகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இரண்டு குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்