தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த (30.04.24) ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நபர் ஒருவர் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது , அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பின்பக்கமாக வந்து அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு சென்று உள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத் IPS அவர்கள் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் TPS அவர்களின் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜெகதீசன், தனிப்படை உதவிஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சக்தி வ/20s/o. சங்கர்காப்புக்கார காலனி, செட்டி மண்டபம், கும்பகோணம் குணசீலன் வ/23s/o.ரவிராஜா நகர் ,விருமாண்டி, கும்பகோணம் ஆகியோரை கைது செய்து மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது . மேற்படி நபர்களிடமிருந்து 2 செல்போன், சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்