தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் பாணதுறை திருமஞ்சன வீதியிலுள்ள ஒரு தனியார் ATM மையத்தில் நெற்று (14-5-2020) யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் ATM உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில் கிழக்கு காவல்துறை போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரனை மேற் கொண்டார்கள் இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவு படி கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கிழக்கு காவல்துறை ஆய்வாளர் திரு .ரமேஷ் குமார் மற்றும் கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜ ,செல்வகுமார் ஊர்காவல்படையினார்.திரு . கதிஷ் ,ஜம்புலிங்கம் ,ரமேஷ், சண்முகம் ,சிவசங்கர் ,சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தனிப்படையினர் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்ல்களை சேகரித்தும் CCTV பதிவுகளில் கிடைத்த அடையாளங்களின் அடிப்படையிலும் கும்பகோணம் பானாதுரை பகுதியை சேர்ந்த வசீகரன் (18) என்பவரை பிடித்து விசாரித்ததில் தான் இன்று காலை ATM மையத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதன் பின் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்ற எட்டு மணி எட்டு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படையினரை தஞ்சைமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டி சிறப்பித்தார்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்