தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தியதாகவும் அவரை விடுவிக்க ரூபாய் பத்து லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கும்பகோணம் காவல் துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கும்பகோணம் துணை கண்காணிப்பர் மேற்ப் பார்வையில் தாழுக்கா காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது .
விசாரணையில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த சேகர் (எ) தண்டபாணி, சுவாமிநாதன், கவிதீபன், கண்ணதாசன் அப்துல் குதீஷ் மற்றும் திருவையாறை சேர்ந்த பரமேஸ்வாரன் கொண்ட ஆறு நபர்கள் பஷீர் அகமதுவை கடத்தியதும் அவர்கள் மன்னார்குடி பகுதியில் இருப்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து கும்பகோணம் தாழுக்கா காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் Hc. ஜம்பு லிங்கம் ,கதீஷ்,சண்முகும் ,ஜனா ஆகிய தனிப் படை போலீசார் மன்னார்குடியில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் பயன் படுத்திய TN50 AE8088 டைய மாருதி சுசூகி BREEZA காரை கைப்பற்றி கடத்தப்பட்ட பஷீரையும் மீட்டு குற்றவாளிகளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.
இவ்வழக்கில் தனிப்படை போலீசார் மிக வேகமாக செயல் பட்டு சுமார் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்