தஞ்சாவூர் : கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு. P .பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் 07.07.2020 ,செவ்வாய்கிழமை மாலை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.ரமேஷ் குமார் ,மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. P .இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .
குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வி.சத்தியநாராயணன் ,ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் A .ஜிர்ஜிஸ் ,நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் வேதம் V .முரளி ,ஹோட்டல்கள் சங்க பொருளாளர் B .ரமேஷ்ராஜா ,தமிழ்நாடு வர்த்தகர் நலக் கழக பிரதிநிதி S .சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இக்கூட்டத்தில் வணிகர்கள் ~ வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
அதன்படி,
1 ) கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த வேண்டும். வாகனத்தை சரியாக பார்க் செய்யும் படி வாடிக்கையாளர்களை வலியுறுத்த வேண்டியது கடை உரிமையாளர்களின் பொறுப்பு. கடையின் பொருட்களை வீதியில் அடுக்கி போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.
2 ) அரசு அறிவித்துள்ள நேரத்திற்குள் கடைகள் பூட்டப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காவலர்கள் வந்து கடையை அடைக்க சொல்லும் படியான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது. கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
3 ) மளிகை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெறும் பெரிய கடைத்தெரு ,சக்கரபாணி தெற்கு , பி சண்முகம் தெரு ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் கனரக வாகனங்களிலிருந்து சரக்குகளை ஏற்றவோ ,இறக்கவோ கூடாது .சரக்குகளை கையால்வதற்கான நேரம் காவல்துறையால் வரையறை செய்து அறிவிக்கப்படும் . அதன் மூலம் பெரிய கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும்.
4 ) பாதுகாப்பு நலன் கருதி கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது , கடையின் ஜன்னல்கள் ,மேற்கூரைகள் ,முன் கதவுகள் ( அ ) ஷட்டர்கள் போன்றவற்றை மிகுந்த உறுதித் தன்மை வாய்ந்ததாக அமைப்பது போன்ற வை மிகவும் அவசியமாகும்.
5 ) சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ,குற்றச்செயல்களை தடுக்கவும் , போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும் , பகலிரவு பாராமல் சுற்றுக் காவல் பணியை மேற்கொண்டும் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை உங்கள் நண்பனாக செயல்படும் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம் என காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு .P.பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார் .
வணிகர்கள் சார்பிலும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்