தஞ்சாவூர்: தஞ்சாவூர், கும்பகோணம் புறப்பகுதியான மேம்பாலம் நீடாமங்கலம் சாலை அருகிலுள்ள ஊசிமாதக்கோவில் பகுதியில் வசித்து வரும் ராமு என்பவரின் மகன் உச்சாணி என்கின்ற விமல் (25) பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான இவரை நேற்று இரவு (15-1-2022) ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்கள்.
இத்தகவல் கிடைத்தவுடன் திருவிடைமருதூர் துணைகண்காணிப்பாளர் திரு. வெற்றிவேத்தன் நாச்சியார்கோவில் காவல்நிலைய ஆய்வாளர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா – ஐபிஎஸ் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை செய்யப்பட்ட விமலின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்கள். அதன் அடிப்படையில் தப்பி ஓடிய கொலை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து திருவிடைமருதூர் துணைகண்காணிப்பாளர் திரு.வெற்றிவேந்தன் மேற்பார்வையில் நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி ரேகாராணி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் கவியரசன்.விக்னேஸ்,ரமணி ஆகிய போலீசார்கள் மற்றும் தஞ்சை சரக தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மோகன் தலைமை காவலர். திரு உமாசங்கர் மற்றும் காவலர்கள் கௌதம், அருண், அழகு நவீன் ,மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இதில் இக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான கும்பகோணம் பாரதி நகரில் வசிக்கும் ராவணன் மகன் தர்மராஜ் (28) என்பவரை 16-1-2022 விடியற்காலை 2 மணி அளவில் கொலை நடந்து ஐந்து மணி நேரத்தில் திருநாகேஸ்வரம் அருகில் அதிரடியாக தஞ்சை சரக தனிப்படை போலீசார் கைது செய்தார்கள்.
இந்நிலையில் நாச்சியார்கோவில் போலீசார் தப்பி ஓடிய மற்ற ஐந்து கொலைக் குற்றவாளிகளை தேடி புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள் அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு பெண் உட்பட (தர்மராஜின் தாயார் ரேமா,மற்றும் அவனது கூட்டாளிகள் சந்தோஷ்,சதீஷ் ) ஆகிய மூன்று நபர்களை விசாரித்ததில் அவர்கள் இக்கொலையில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகள் என தெரிய வந்தது அதனை தொடர்ந்து அம்மூவரையும் கைது செய்து தப்பி சென்றுள்ள மற்ற இரு குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்