தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 20.8.22 ஆம் தேதி காலை வேளையில் எல்பிஎஸ் சாலையில், முன்விரோதம் காரணமாக மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மீது முன் விரோதம் காரணமாக ஏழு நபர்கள் கொண்ட கும்பலால் நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வினோத் என்பவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்த வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்த புனேனி ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு அசோகன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பேபி ஆகியோரின் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் , சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், Hc தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, காவலர் ஜனார்த்தனன் மற்றும் மேற்கு காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான, கும்பகோணம் பகுதி சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், கார்த்தி, ஆல்ஃபா குமார் ஆகியோரை பிடித்து விசாரித்து அவர்களிடமிருந்து கொலைவெறி
தாக்குதல் நடத்த பயன்படுத்திய இரண்டு அருவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்