தஞ்சை: கும்பகோணம் மேலக்காவேரி வைக்கோல்கட்டுகார தெருவில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் என்றும் போல் இன்று காலை மேலக்காவேரி பெரும்பாண்டி சுடுகாடு வழியாக மீன் வியாபாரத்திற்காக வைத்திருந்த ரூபாய் 5,330 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது முகமூடி அணிந்த சில நபர்கள் இவரை வழிமறித்து மீன் வியாபாரி ஆறுமுகத்தை உருட்டு கம்பியால் தாக்கி விட்டு பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதை தொடர்ந்து, மேலக்காவேரியிலுள்ள வேளாக்குடி செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்ரப் அலி இவர் (மட்டன் ஸ்டால்)கறி வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் மேலக்காவேரி ஆழ்வான் கோவில் தெரு பகுதியில் கரி வியாபாரத்திற்காக வைத்திருந்த ரூபாய் 6,750 மற்றும் செல்போனுடன் சென்ற போது முகமூடி அணிந்த அதே மர்ம கும்பல் உருட்டு கம்பியால் கறி வியாபாரி அஷ்ரப் அலி தாக்கிவிட்டு அவரின் பைக் சாவியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
ஒரே நாளில் (18-3-2020) அடுத்தடுத்து உள்ள பகுதியில் சில மணி நேரத்தில் காலை வேளையில் இந்த இரு சம்பவமும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம் மற்றும் அசரப் அலி உள்ளிட்டோர் தாங்கள் வழிபறி கொள்ளையார்களால் தாக்கப் பட்டதையும் தங்கள் பணம் பொருள்கள் வழிபறி செய்யப்பட்டதையும் பற்றி புகார் அளித்துள்ளனர். இப்புகாரை தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இதன் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்