தஞ்சை, மே.3- தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, காந்தபுனேனி IPS அவர்கள் உத்தரவின்படி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலசுப்ரமணியன், ஜனார்த்தன், நாடிமுத்து ஆகியோர் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் பெரியக்கடைத்தெருவில் உள்ள வடநாட்டு (ராஜஸ்தான்) வியாபாரிகள் சிலருக்காக பெங்களூர் பகுதியிலிருந்து வந்த சரக்கு கண்டைனர் லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் கடத்தி வரப்பட்ட சுமார் 1,100 கிலோ பான் மசாலா குட்கா (1 டன்) பொருட்களை கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடியாக லாரியுடன் பறிமுதல் செய்தார்கள். டிரைவர் தலைமறைவானதால் இந்த வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் சில நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்