தஞ்சை : கும்பகோணம், ஆழ்வான்கோயில்தெரு அருகிலுள்ள காவிரிக்கரை (படித்துறை) தெருவில் எண்ணெய் கடை வியாபாரம் செய்து வரும் ராமு (எ) ராமுர்த்தி என்பவர் இன்று இரவு (15-3-2020 ) சில மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இவரின் வீட்டிற்கு திருமணப் பத்திரிக்கை வைக்க வருவது போல் வந்த சில மர்ம நபர்கள் அவரது மனைவியை கட்டி போட்டு விட்டு ராமு என்கிற ராமமூர்த்தி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம். இத்தகவல் அறிந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ராஜேஸ்வரன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் கிழக்கு காவல்துறை போலீசார் இந்த கொலை முன் விரோதத்தால் நடந்துள்ளதா அல்லது பணம், நகைகளுக்காக நடந்துள்ளதா என பல கோணத்தில் தீவிர விசாரணை மேற்கோண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க தஞ்சையில் இருந்து சிறப்பு கைரேகை நிபுணர்கள் வந்தார்கள் மற்றும் மோப்ப நாய் வந்தது அது சம்பவம் நடந்த வீட்டு அருகிலுள்ள சில தெருக்கள் வரை சென்று நின்று விட்டது. இச்சம்பவத்தால் கும்பகோணம் பகுதி மக்கள் பரபரப்புடன் உள்ளார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்7