தஞ்சாவூர் : கும்பகோணம்,ஜூலை.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் நடந்தது வந்ததை தொடர்ந்து அதன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவு படி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் TPS அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை SI கீர்த்திவாசன் தலைமையில் SI மோகன், SSI ராஜா, HC ரமேஷ்,
HC ஜம்புலிங்கம், HC சண்முகசுந்தரம், HC கதீஷ், HC சுரேஷ், HC உமாபதி, HC வேளாங்கன்னி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 2 மாதமாக தொடர்ந்து 36 இடங்களில் CCTV பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்ததை தொடர்ந்து செயின் பறிப்பு கும்பலை பற்றி கிடைத்த தகவலின் அடைப்படையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த 1)அஜய்குமரன், 2)சண்டே (எ)சந்தோஷ், 3)சிலம்பு (எ) சிலம்பரசன்,
4) ஹரிதாஸ்
5) ஜகன் (எ) தமிழரசன் நாச்சியார்கோவில்
(முன்னால் ரவுடி HS) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 11 சவரன் நகைகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் (பஜாஜ் பல்சர் 220, யமாக facer) ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் இதனையொட்டி கும்பகோணம் பகுதி வாழ் மக்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள் .