குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.இரா. ஸ்டாலின் IPS அவர்கள், பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் Speed Radar Gun பயன்படுத்தி தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.பா அவர்கள் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய நான்கு பேர் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி அதிவேகமாக வாகனத்தை இயக்கிய நான்கு வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும்.
வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து, சமுதாயப் பொறுப்புடன் செயல்பட்டு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் முழு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறோம்.