கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி லத்திகா வயது 34 நேற்று இவர் தனது கணவருடன் பைக்கில் காந்தி பார்க் சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து இரவு 7-30 மணி அளவில் புட்டுவிக்கி ரோடு வழியாக குனியமுத்தூர் திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த 3 ஆசாமிகள் லத்திகாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர் இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் லத்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்