சென்னை: சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கிண்டி, மடுவாங்கரை, சாத்தானிபேட்டை பகுதியில் கண்காணித்த போது,
அங்கு குதிரை பந்தயம் தொடர்பாக பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1) விநாயகமூர்த்தி 45, கிண்டி 2) முருகன் 36, வேளச்சேரி 3) கனகராஜ் /37, ராஜா அண்ணாமலைபுரம் 4) ஜெயசீலன் 58, அண்ணாநகர் 5) ஆறுமுகம் 56, சைதாப்பேட்டை 6) வெங்கடேசன் 49, அம்பத்தூர் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.6,500/- கைப்பற்றப்பட்டது- மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.