விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பெருமாள் நகரை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் 36. கணபதி 20. இவர்கள் இருவரின் மீதும் விழுப்புரம் பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6.11.2022 அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக வெங்கடேசன், கணபதி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கொலை வெறியுடன் தாக்கியதாக அவர்கள் இருவரையும் விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுடைய குற்ற செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் திரு.மோகன் உத்தரவிட்டார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்து கடலூர் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.