திருநெல்வேலி : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் 09.03.2022திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம், கீழநத்தம், பகுதியைச் சேர்ந்த மணிகணேஷ்(45) என்பவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.மேற்படி மணிகணேஷை05.02.2022அன்றுநொச்சிகுளம்,காலனிதெருபெருமாள்என்றசெல்வம்(34),திருநெல்வேலிடவுண்,சொக்கட்டான்தோப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் ராஜபாண்டி(29) ஆகிய இருவரும் KTC நகர் அருகே வழிமறித்து, ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேற்படி எதிரிகள் இருவரும் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படிஎதிரிகள்மீதுகுண்டர்தடுப்புகாவல்சட்டத்தின்கீழ்நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 09.03.2022 இன்று எதிரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.