சென்னை : சென்னை பெருநகர காவல் துறையால் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் அஜித் குமார் (எ) இட்டா அஜித் வ/24 என்பவர் மீதும் J-13 தரமணி காவல் நிலையத்தில் சேகர் (எ) சிட்டி சேகர் வ/55 என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் மேற்படி இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய 26.09.2020 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி இரு குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்