கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த கௌதம் மற்றும் நீலிக்கோணாம் பாளையத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன சுந்தர்(19), கோவை மாநகரின் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டும், தனியாக செல்லும் நபர்களைப் பார்த்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் செய்தும், பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு சுமித் சரண் ஐபிஎஸ் அவர்கள் ஆணையின் பேரில் நேற்று முன்தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்