காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) இந்துசேகர் 37. 2 ) அஜீத் 23. 3 ) விஜயகுமார் 21. 4 ) மணிகண்டன் ( எ ) அண்ணாத்தூர் மணி 5 ) ஏகா ( எ ) ஏகாம்பரம் 40. ஆகிய ஐந்து நபர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்
கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் 5 நபர்களை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்