காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார் 26 எண்.20/70, நேதாஜி தெரு, பொய்யாக்குளம், காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி: Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று(06.10.2022) உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்