காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், மணிமஙகலம் மற்றும் ஒரகடம் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியான
1 ) வாசு ( எ ) வாசுதேவன் 21. 2 ) வசந்த் ( எ ) ஷார்ப் வசந்த் 21. 3 ) முத்துப்பாண்டி 23. ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 26.12.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்