காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம், புதிய இரயில் நிலையம், இந்திரா நகர், முதல் தெருவைச் சேர்ந்த ராகவன் 19 என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு
காவல் நிலைங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டு தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு..M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி, இ.ஆ.ப. , அவர்கள் மேற்படி எதிரி ராகவன் என்பவரை ஓராண்டு தடுப்புக்காவலில ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.