திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திசையன்விளை, மகாதேவன் குளம், ஈசன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டையப்பன் என்பவரின் மகன் அய்யப்பன் (20) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேற்படி குற்றவாளி அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி கவனத்திற்கு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ஐயப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 14.01.2025 அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்