கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் 29. என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஆல்பர்ட் என்பவரை முன்விரோதத்தின் காரணமாக கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்கண்ட குற்றவாளியானவர் தொடர்ந்து எறையூர் கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அதனால் அங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், மேலும் இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் IAS., அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, குற்றவாளியை இன்று உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பொது அமைதியை குலைக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.