கடலூர்: நெய்வேலி மாற்று குடியிருப்பு, பெருமத்தூர் என்பவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த வினோத்குமார் வயது 23 , அகிலன் வயது 23 , ஆகிய இருவரும் ரஜினிகாந்தை கத்தியை காட்டி மிரட்டி, கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் 500 பறித்துக்கொண்டு, யாரிடமாவது சொன்னால் கத்தியால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் திரு. சாகுல் அமீது அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட வினோத் ( எ)வினோத் குமார் (23) , அகிலன் (23) ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வினோத்குமார் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது .நெய்வேலி நகர காவல் நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.சக்தி கணேசன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கே.பாலசுப்பிரமணியம் IAS அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.