சேலம்:கடந்த (19.07.2025) ஆம் தேதி வாழப்பாடி காவல் நிலைய எல்லையில் சுமார் 21.625 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்தவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்